/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1502.jpg)
விஜய், பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளஇப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர்தில்ராஜு தயாரிக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, தமன்இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இதையடுத்துதளபதி 67 படத்தைலோகேஷ்கனகராஜ் இயக்கவுள்ளார். விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியானமாஸ்டர்திரைப்படம் பெரும்வரவேற்பைபெற்ற நிலையில்இந்த கூட்டணி மீண்டும் தளபதி 67 படத்தில் இணைய உள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தளபதி 67 படத்தில் நடிகை த்ரிஷாநடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிப்பதாக கூறப்படுகிறது. அதில் ஒன்று சமந்தா என்று கூறப்பட்ட நிலையில் தற்போது மற்றொரு கதாநாயகியாக த்ரிஷா நடிக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜய் த்ரிஷாஇருவரும் கில்லி, திருப்பாச்சி ஆதி, குருவி ஆகிய படங்களில் இணைந்து நடித்திருந்தனர். இருவரும் கடைசியாக கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான குருவி படத்தில் நடித்திருந்தனர். அதன் பிறகு இருவரும் இணைந்து நடிக்காத நிலையில் தற்போது 14 வருடங்கள் கழித்து தளபதி 67 படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)